திருச்செந்தூர் நகராட்சிக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு


திருச்செந்தூர் நகராட்சிக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 4 Jan 2022 8:23 PM IST (Updated: 4 Jan 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் நகராட்சிக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்செந்தூர் நகராட்சியில் வார்டு வரையறை செய்த பிறகு 27 வார்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, 27 வார்டுகளில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி வரைவு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் குறித்து அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் கூட்ட முடிவில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 32 வாக்குச்சாவடிகள் அடங்கிய இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆறுமுக கனி, திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் வேலவன் மற்றும் அரசியல் கட்சியினர், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story