3¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-கலெக்டர்


3¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு-கலெக்டர்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:11 PM IST (Updated: 4 Jan 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:- 
தைத்திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் உலர்ந்த திராட்சை, 50 கிராம் முந்திரி, 10 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. 

டோக்கன்

அதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர ரேஷன் கடைகள் 579, பகுதிநேர ரேஷன் கடைகள் 156 என மொத்தம் 735 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி கலெக்டர் பாலச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் சவுந்தர்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் திவாகர், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் பிரகாஷ், நகரசபை முன்னாள் துணைத்தலைவர்கள் செந்தில், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story