போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
கூடலூர்
கூடலூரில் போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணியில் இருந்து நிலம்பூர் சென்ற ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் போதைப்பொருள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பந்தலூரை சேர்ந்த முர்ஷித் கபீர் (வயது 21), கார் டிரைவர் அன்ஷாத் (24), ராஷித் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கூடலூரில் சிலர் போதைப்பொருள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே இது குறித்து நீலகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கூடலூரில் 4 பேர் கைது
இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். அதில் கூடலூர் ஈட்டிமூலாவை சேர்ந்த ஷபீன் (22) என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து ஷபீனையும், அவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய ஷாரீப் ஜமான் (26), வண்டிப்பேட்டை பீட்டர் (27), தோட்டமூலா பிரேம் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஷபீன் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story