காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x

காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்:
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கக்கூடாது. விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜெயபால், பொருளாளர் காளியப்பன், துணை செயலாளர்கள் மாலினி, ரமேஷ், துணைத்தலைவர்கள் ஜார்ஜ் வர்க்கீஸ், பழனிச்சாமி, ரோஸி, சஞ்சீவ் உள்பட திரளானவர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றிக்கொடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story