தளி பகுதியில் கத்தரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
தளி பகுதியில் கத்தரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
தளி,
தளி பகுதியில் கத்தரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
கத்தரி சாகுபடி
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டகால, மத்திய கால, குறுகியகால பயிர்கள், தானியங்கள், கீரைவகைகள் உள்ளிட்டவற்றை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு எண்ணற்ற கூலித்தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தளி சுற்று வட்டார பகுதியில் கத்தரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வறட்சியைத் தாங்கி வளரும்
மணமும், சுவையும், மருத்துவக் குணமும் கொண்ட கத்தரிக்காயை ஜனவரி முதல் மே மாதம் வரையிலும் ஜூன் முதல் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் அந்தந்த பகுதியில் உள்ள மண்வளத்திற்கு தகுந்தவாறு பயிரிட்டு வருகிறோம். புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள் அடங்கிய கத்தரிக்காய் நடவு செய்த 75 நாட்களில் இருந்து மகசூல் அளிக்க ஆரம்பித்துவிடும். 120 நாட்கள் வரையும் குறிப்பிட்ட இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. தண்ணீர் தேவையும் குறைவு. வாரத்துக்கு ஒருமுறை பாய்ச்சினால் போதுமானது. வருடம் முழுவதும் சந்தையில் கிடைக்கின்ற கத்தரிக்காய் நீலம், பச்சை நிறத்தில் பவானி மற்றும் புளியம்பூ, வெள்ளை மற்றும் பச்சை வரிகத்தரி என பல்வேறு ரகங்களில் கிடைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
வாதநோய், ஆஸ்துமா, சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடல் பருமனையும் குறைக்கும் தன்மை உடையது.
சாகுபடி செய்யப்பட்ட கத்தரி செடிகள் பூத்து குலுங்கி வருகிறது. அவற்றை பராமரிப்பு செய்து விளைச்சலை ஈட்டும் நோக்கில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம். இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story