பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம்
பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம்
திருப்பூர்,
கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியதால் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் சுகாதார அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முககவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மாநகரம் முழுவதும் அபராத நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேலும் மாநகராட்சி ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், பொது இடங்களுக்கு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். வணிக நிறுவனத்தினர் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முகவசம் கட்டாயம் என்பதை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story