தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தர்மபுரி மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். செந்தில்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தபடி தர்மபுரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 462 முழுநேர ரேஷன் கடைகளும், 568 பகுதிநேர ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 ரேஷன் கடைகளும் என மொத்தம் 1,071 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
டோக்கன்கள்
தர்மபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்து 825 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 718 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன்கள் வீடுதோறும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ள வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு, குறிப்பிடப்பட்ட நாளில் பெற இயலாதவர்கள் வேறு நாட்களில் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி கலெக்டர் முத்தையன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன், தாசில்தார் கனிமொழி, துணைப்பதிவாளர் நாகராஜ், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story