மனைவியை மிரட்டிய கணவர் கைது
தன்னுடன் நெருக்கமாக உள்ள படத்தை வெளியிடுவதாக கூறி மனைவியை மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
பழனி:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபருக்கும், பழனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதுதொடர்பாக பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், தனது கணவர் மீது அந்த பெண் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனது கணவர் தன்னிடம் விவாகரத்து கேட்டு வந்த நிலையில், நான் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பழனி சிறையில் அடைக்கப்பட்டார். கைதான அந்த வாலிபர், பெங்களூருவில் வக்கீல் படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்காக தனது மனைவியுடன் இருந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி, கணவரே மிரட்டிய சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story