மத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பசு, கன்று செத்தன


மத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பசு, கன்று செத்தன
x
தினத்தந்தி 4 Jan 2022 9:53 PM IST (Updated: 4 Jan 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பசு, கன்று செத்தன.

மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள மாதம்பதியை சேர்ந்தவர் தீபா (வயது 30). இவர் தனக்கு சொந்தமான பசு, கன்றை அங்குள்ள முருகன் கோவில் அருகில் ஒரு தோப்பில் கட்டி வைத்தார். அப்போது காற்றின் வேகத்தால் மின்சார கம்பிகள் அறுந்து பசு, கன்றின் மீது விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கி பசு, கன்று செத்தன. இதனை அறிந்த தீபா மற்றும் ஊர் பொதுமக்கள் முருகன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக பழுதாகி கிடக்கும் மின்கம்பிகளை சீரமைக்காத மின்வாரியத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story