உரிய ஆவணங்கள் இல்லாத 16½ டன் விதைகள் விற்பனை செய்ய தடை-அதிகாரிகள் நடவடிக்கை


உரிய ஆவணங்கள் இல்லாத 16½ டன் விதைகள் விற்பனை செய்ய தடை-அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Jan 2022 9:55 PM IST (Updated: 4 Jan 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இலலாத ரூ.21 லட்சம் மதிப்பிலான 16½ டன் விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.

கிருஷ்ணகிரி:
திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அனைத்து விதைகளின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம் தலைமையில், சிறப்பு பறக்கும் படையினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், 16.37 டன் விதைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடைவிதித்தனர். இதன் மதிப்பு ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
நடவடிக்கை
இதைத் தொடர்ந்து விதைச்சட்டம் 1966-ன் படியும், விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படியும் உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு, கிருஷ்ணகிரி விதை ஆய்வாளர் கண்ணன் மற்றும் சேலம், தர்மபுரி விதை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story