விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூரில், கீழ்வேளூர் -கச்சனம் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், விவசாயிகள் சங்க ஒன்றிய துணை செயலாளர் ராஜப்பா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
40 பேர் கைது
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி வேண்டும். 2020-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை விடுப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர்.இந்த சாலை மறியலால் திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமருகல்
திருமருகல் பஸ்நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் திருமருகல் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் தலைமையில் நடந்தது. விவசாய சங்க நாகை மாவட்ட செயலாளர் பாபுஜி பேசினார். .இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன், திட்டச்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருமருகல் -நன்னிலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story