கடலின் ஆழத்தை காட்டும் கருவி கரை ஒதுங்கி கிடந்தது
வேளாங்கண்ணி அருகே கடலின் ஆழத்தை காட்டும் கருவி கரை ஒதுங்கி கிடந்தது.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கடலின் ஆழத்தை காட்டும் கருவி கரை ஒதுங்கி கிடந்தது.
கரை ஒதுங்கியது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி வடக்கு மீனவ கிராம கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கி கிடப்பதாக கீழையூர் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கரை ஒதுங்கி கிடந்த பொருளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கரை ஒதுங்கி கிடந்தது துறைமுகத்தில் கப்பல் வரும்போது ஆழமான பகுதியை அடையாளம் காட்டுவதற்காக கடலில் மிதக்க விடப்படும் போயா எனப்படும் மிதவை என்பது தெரிய வந்தது.
கடற்கரையில் கிடந்த சிலிண்டர்
இதேபோல அந்த கருவியில் பொருத்தப்பட்டிருந்த பெரிய அளவிலான சிலிண்டர் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் அங்கு சென்று அந்த சிலிண்டரை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story