பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு


பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 10:04 PM IST (Updated: 4 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பழனி:

தொடர் மழை எதிரொலியாக, 65 அடி உயரம் கொண்ட பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் 64 அடி தண்ணீர் உள்ளது. இதனையடுத்து பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 

அதன்பேரில் பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனத்துக்கு நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் அருண் ஆகியோர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். 

அணையில் இருந்து நேற்று முதல் 110 நாட்களுக்கு, வினாடிக்கு 70 கன அடி வீதம் தண்ணீர் இடது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பழனி அருகே உள்ள பெரியஅம்மாபட்டி, நெய்க்காரப்பட்டி, மானூர், கோரிக்கடவு உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story