ஆற்றில் மூதாட்டி பிணம்
வேதாரண்யம் அருகே ஆற்றில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 70). இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சின்னபொண்ணு தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறங்கி இறால் மீனை பிடித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அடப்பாற்றில் இறால் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரை தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஆற்றில் சின்னப்பொண்ணு உடல் மிதந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் வேட்டைகாரனிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story