ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 10:08 PM IST (Updated: 4 Jan 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்றனர்.

உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 30). விவசாயி. இவரது மனைவி முத்துச்செல்வி (26). இவர் தேனி-கம்பம் சாலையில் எஸ்.பி.எஸ்.காலனி பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று முத்துச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 
இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் முத்துச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story