சிராவயல் மஞ்சு விரட்டுக்காக தயாராகும் காளைகள்


சிராவயல் மஞ்சு விரட்டுக்காக தயாராகும் காளைகள்
x
தினத்தந்தி 4 Jan 2022 10:36 PM IST (Updated: 4 Jan 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

சிராவயல் மஞ்சு விரட்டுக்காக காளைகள் தயாராகி வருகின்றன. மண் குத்துதல், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி காளைகளுக்கு அளிக்கப்படுகிறது.

சிங்கம்புணரி, 

சிராவயல் மஞ்சு விரட்டுக்காக காளைகள் தயாராகி வருகின்றன. மண் குத்துதல், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி காளைகளுக்கு அளிக்கப்படுகிறது.

சிராவயல் மஞ்சுவிரட்டு

ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று திருப்பத்தூர் அருகே சிராவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டம் சிரா வயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ்பெற்றது. அன்றைய தினம் மஞ்சுவிரட்டு நடைபெறும் பொட்டல் திடலில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு வந்து போட்டியை கண்டு களிப்பது வழக்கம். 
இத்தகைய மஞ்சுவிரட்டு வருகிற 16-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக உள்ள காளைகளுக்கு சிங்கம்புணரி பகுதியில் தற்போது இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த டாக்டர் அருள்மணிநாகராஜன் காளையான கொம்பன் காளை மற்றும் மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மமேஷ் என்பவரின் கஜா உள்பட பல்வேறு காளைகளுக்கு  இறுதிகட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மண்குத்துதல், நீச்சல் பயிற்சி

இந்த காளைகளுக்கு தினந்தோறும் அதிகாலையில் மண் குவியல் செய்துள்ள இடத்திற்கு அழைத்து சென்று மண் குத்துதல் பயிற்சியும், அதன் பின்னர் கொம்பு சீவி விடுதல், நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காளைகளுக்கு சத்தான உணவுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வழங்கி வருகின்றனர். 
இதுகுறித்து அந்த காளைகளின் உரிமையாளர்கள் கூறியதாவது- சிராவயல் பகுதியில் நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு போட்டிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது இறுதிகட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த காளைகளை மிகவும் கவனிப்புடன் பராமரித்து பயிற்சி அளித்து வருகிறோம். இனி வரும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் இந்த காளைகள் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெறும் என எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story