2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
தினத்தந்தி 4 Jan 2022 11:07 PM IST (Updated: 4 Jan 2022 11:07 PM IST)
Text Sizeஅரகண்டநல்லூர் அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். மேலும் இது தொடர்பாக மணிவிளக்கு, ரவிச்சந்திரன் மற்றும் முருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire