லாரி டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் நஷ்டஈடு
விபத்தில் பலியான லாரி டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை தாலுகா, குருந்தனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி (வயது 31). தேவகோட்டையை சேர்ந்த ஆரோக்கிய அருள் செல்வன் என்பவரிடம் ஆயில் டேங்கர் லாரி டிைரவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 16.3.2015-ம் தேதி இரவு டீசல் ஏற்ற டேங்கர் லாரியை கரூருக்கு ஓட்டிச் சென்றபோது 17.3.2015-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கரூர் மாவட்டம், சீகம்பட்டி பிரிவு, டானா பஸ் நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டது.அந்த விபத்தில் அமராவதி இறந்துவிட்டார். அவரது இறப்பிற்கு நஷ்ட ஈடு கோரி அவரது மனைவி காளீஸ்வரி, அவரது குழந்தைகள் அருண், அஷிகா, பெற்றோர் நாகலிங்கம், பாப்பா ஆகியோர் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தேவகோட்டை சார்பு நீதிபதி முருகன், மதுரை ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மொத்த இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 98 ஆயிரத்து 800-ஐ மனு தாக்கல் செய்த தேதி முதல், தொகை செலுத்தும் தேதி வரை 7½ சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story