2 லட்சத்து 76 ஆயிரத்து 401 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்


2 லட்சத்து 76 ஆயிரத்து 401 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:30 PM IST (Updated: 4 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
மயிலாடுதுறை சேர்ந்தங்குடி கூட்டுறவு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துணை பதிவாளர் த.ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
விழாவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கலெக்டர் பேசுகையில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை அனைத்து பொதுமக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
424 ரேஷன் கடைகளில்...
அதனடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 424 ரேஷன் கடைகளிலும் 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வருகிற 10-ந் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு விடும். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடாத வகையில் டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் டோக்கன் பெற்று அனுமதிக்கப்பட்டுள்ள நாளில் பொங்கல் பரிசினை பெற்று செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். 
விழாவில் தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கண்காணிப்பாளர் உ.ராஜேந்திரன், ரேஷன் கடை கண்காணிப்பு குழு உறுப்பினர் அப்பர்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
முடிவில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் மனோகரன் நன்றி கூறினார்.

Next Story