தமிழக மீனவர்கள் 13 பேருக்கு 18-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
தமிழக மீனவர்கள் 13 பேருக்கு 18-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
ராமேசுவரம்
நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 20-ந் தேதி மீன்பிடிக்க சென்ற இரண்டு படகு மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களும் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த மீனவர்களை வருகின்ற 18-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து 13 மீனவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேர் அடுத்தடுத்து காவல் நீட்டிப்பு செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story