காரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டத்தில் காரில் கடத்திய 1,200 கிேலா ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் காரில் கடத்திய 1,200 கிேலா ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ரோந்து பணி
மார்த்தாண்டம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஏட்டு ராஜேஷ் ஆகியோர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வெட்டுமணியில் சென்ற போது ஒரு சொகுசு கார் குழித்துறையை நோக்கி வேகமாக சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்தனர்.
காரை சோதனையிட்டபோது அதில் 20 மூடைகளில் 1,200 கிேலா ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி அழகியமண்டபத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர். மேலும், கார் டிரைவரான குட்டக்குழியை சேர்ந்த விபின் (வயது25) என்பவரை கைது செய்தனர். பின்னர் காரும், ரேஷன் அரிசியும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story