புதுப்பேட்டை பகுதியில் விவசாயிகள் சாலை மறியல்


புதுப்பேட்டை பகுதியில் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:52 PM IST (Updated: 4 Jan 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சாலை மறியல்

ஜோலார்பேட்டை

பாரத பிரதமரின் விவசாய நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு புதுப்பேட்டையில் இயங்கிவரும் தனியார் வங்கியில் தங்கள் கணக்கில் 2 தவணைகளும் பிரதமர் விவசாய நிதி வரவில்லை என கூறி நேற்று காலை வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர்  நாட்டறம்பள்ளி -திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், சுந்தரேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு வங்கி மேலாளரிடம் பேசி, விவசாயிகள் கணக்கிற்கு பணம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story