வாணியம்பாடி அரசு மருத்துவமனை செவிலியருக்கு ஒமைக்ரான்?


வாணியம்பாடி  அரசு மருத்துவமனை செவிலியருக்கு ஒமைக்ரான்?
x
தினத்தந்தி 4 Jan 2022 11:52 PM IST (Updated: 4 Jan 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனை செவிலியருக்கு ஒமைக்ரான்?

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வேலூர் சங்கரன் பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு புதியவகை ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இவருக்கு ஓமைக்கரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என மேல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story