‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
அபாய பள்ளங்கள்
பழனி புதுநகரில் சிவன்கோவிலுக்கு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் மேல் உள்ள சிறுபாலம் சேதம் அடைந்து, 2 பெரிய பள்ளம் உருவாகி விட்டது. இதனால் சாலையில் நடந்து செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் பாலம் பலமிழந்து இருப்பதால் வாகனங்கள் செல்லும் போது இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை பாலத்தை புதிதாக கட்ட வேண்டும். -மாரிமுத்து, பழனி.
வேடசந்தூர் தாலுகா சித்தூரில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் குறைந்த அளவே தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-சுருளிபாண்டியன், மந்தகுடும்பன்பட்டி.
பழனி அருகே உள்ள காவலப்பட்டியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் சில இடங்களில் மண், குப்பைகள் சேர்ந்து சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியதம்பி, பழனி.
செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டையில் சில இடங்களில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால், சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் வசதி செய்து தரவேண்டும்.
-சதீஸ்குமார், பச்சமலையான்கோட்டை.
ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு ஊராட்சி சுப்புலாபுரம் அண்ணாநகரில் சாலை வசதி முறையாக இல்லை. இதனால் மழைக்காலத்தில் தெரு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் சில இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலை வசதி செய்து தருவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-ராகவகண்ணன், சுப்புலாபுரம்.
Related Tags :
Next Story