வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பாடத்திட்டம் சார்ந்த மற்றும் பாடத்திட்டம் சாரா திறமைகளை வளர்த்துக்கொள்ள கல்லூரியில் சங்கங்கள் அமைத்து அதன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதன் பயனாக தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாளை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டுவரும் யாவரும் கேளிர் திறன் வளர சங்கத்தால் நடத்தப்பட்ட ஆன்லைன் போட்டிகளில் சிறந்து விளங்கியதற்காக கல்லூரியின் பைன் ஆர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த ஸ்ரீ திவ்யா என்ற மாணவிக்கு சிந்தனை யாத்ரால் விருது வழங்கப்பட்டுள்ளது. சாய் பவதாரிணி என்ற மாணவி ஆன்லைன் வினாடி வினா போட்டியில் முதல் பரிசும், சுபிசா என்ற மாணவி 2-வது பரிசும் பெற்றுள்ளனர். ஸ்ரீ நாச்சியார் என்ற மாணவி விவாத எழுத்துப்போட்டியில் 2-வது பரிசு பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரியின் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் செந்தில் பிரபு, முதல்வர் செந்தில் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story