மல்லாங்கிணறு பேரூராட்சியில் திட்டப்பணி
மல்லாங்கிணறு பேரூராட்சியில் திட்டப்பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி,
மல்லாங்கிணறு பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், 11-வது மானியக்குழு திட்டத்தின் மூலம் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் 11 ஊருணிகள் தூர்வாரும் பணி, ரூ. 1¼ லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடுதல், பொது நிதி திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், காரியாபட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், காரியாபட்டி யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன், மல்லாங்கிணறு நகர செயலாளர் முருகேசன், மல்லாங்கிணறு பேரூராட்சி பொறியாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story