லால்குடி, முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்


லால்குடி, முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
x
தினத்தந்தி 5 Jan 2022 12:38 AM IST (Updated: 5 Jan 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி, முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

திருச்சி, ஜன.5-
திருச்சி மாவட்டத்தில் பேரூராட்சிகளாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட லால்குடி மற்றும் முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று வெளியிட்டார்.
லால்குடி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் 20,328 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 9,877 பேர், பெண் வாக்காளர்கள் 10,446 பேர். மற்றும் திருநங்கைகள் 5 பேர். மொத்த வார்டுகள் 24. இந்நகராட்சியில் 24 (அனைத்து வாக்காளர்கள்) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முசிறி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் 27,023 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,912 பேர். பெண் வாக்காளர்கள் 14,098 பேர் மற்றும் திருநங்கைகள் 13 பேர் ஆவர். மொத்தமுள்ள 24 வார்டுகளில் 33 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் -9 வாக்குச்சாவடிகள், பெண்கள் - 9 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்கள் வாக்குச் சாவடிகள் 15 ஆகும். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் நகராட்சி ஆணையர்கள் தேர்தல்) மகாலிங்கம், குமார் (லால்குடி), மனோகரன் (முசிறி) ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story