கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
வெள்ளிச்சந்தை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மணவாளக்குறிச்சி மற்றும் அம்மாண்டிவிளை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து சோதனையிட்ட போது சிறு சிறு பொட்டலங்களாக 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் முட்டத்தை சேர்ந்த பெர்லின் ரெவி (வயது 24), டோனிபாய் (27) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story