விபத்தில் மூதாட்டி பலி


விபத்தில் மூதாட்டி பலி
x
தினத்தந்தி 5 Jan 2022 1:00 AM IST (Updated: 5 Jan 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் மூதாட்டி பலியானார்.

களக்காடு:

களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தாமரைசெல்வன் மனைவி சுடலி (வயது 60). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது உறவினர் வீடுகளில் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுடலி களக்காடு-நாகர்கோவில் சாலையில் உள்ள எஸ்.என்.பள்ளிவாசல் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி அவரது மகன் அய்யப்பன் (32) களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Next Story