கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 1:01 AM IST (Updated: 5 Jan 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது

அன்னவாசல்
 அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதற்கு, ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சங்கர் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், பேரூராட்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் அமல்படுத்த வேண்டும். இந்திரா காலனியில் திருமண மண்டபம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளூரணி துளுக்கர் காரணி, பட்டாணி குளங்களை சர்வே செய்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அன்னவாசல் பஸ் நிலையம் மற்றும் அனைத்து தெருக்களிலும் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். அன்னவாசல் மருத்துவமனையில் பல் மருத்துவர், மயக்க மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர் நியமிக்க வேண்டும். இந்திரா காலனியில் உள்ள கழிப்பிடத்தை சீர் செய்து தண்ணீர் வசதியுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இதில், மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story