ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இணைச் செயலாளர் ஜோதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
உள்ளாட்சி துறையில் சுய உதவிக்குழு மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துப்புரவு பணிகளை தனியாரிடம் வழங்கக்கூடாது. தூய்மை தொழிலாளர்களின் பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுடலைராஜ், வரகுணன், நாராயணன், பாலு, சுடலைமணி, மாரியம்மாள், மாடசாமி, கண்ணம்மாள், கோபி, சேர்மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story