சமூக இடைவெளிக்கான வட்டங்களில் பையை வைத்திருந்த ரேஷன் அட்டைதாரர்கள்
சமூக இடைவெளிக்கான வட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்கள் பையை வைத்திருந்தனர்.
அரியலூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதன்படி அரியலூரிலும் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகுப்பை வாங்க ரேஷன் கடைகளுக்கு முன்பு காலை 9 மணியில் இருந்தே ஆண்களும், பெண்களும் வரத்தொடங்கினர். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் வாலாஜாநகரம் போன்ற பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியுடன் நிற்பதற்கு போடப்பட்டிருந்த வட்டங்களில் தாங்கள் கொண்டு வந்த பையை வைத்துவிட்டு, அனைவரும் நிழலில் ஒதுங்கி நின்றனர். காலை 11 மணி அளவில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க தொடங்கியதும் அனைவரும் வரிசையாக சென்று பரிசுத்தொகுப்பை பெற்று சென்றனர்.
Related Tags :
Next Story