தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு


தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2022 1:26 AM IST (Updated: 5 Jan 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணம்;
கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 
கோர்ட்டு உத்தரவு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவிலில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு மையத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட உலோக சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு மையத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 
இங்கு பாதுகாக்கப்பட்டு வரும் சிலைகளின் உண்மை நிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. 
155 சிலைகள் ஆய்வு
அதன்படி இந்திய தொல்லியல் துறை இயக்குனர் மகேஸ்வரி தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு பணிகளை தாடங்கினர். 
சிலைகளின் எடை, உயரம், உலோகங்களின் மதிப்பீடு, சிலைகளின் தொன்மை தன்மை உள்ளிட்டவை குறித்து 10-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆய்வு பணிகள் நேற்று இரவு வரை நீடித்தது. மொத்தம் 155 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயார் செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story