மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது


மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 2:33 AM IST (Updated: 5 Jan 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது

மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே உள்ள புதுகிராமம் 2-வது தெரு காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46), பெயிண்டர். இவர் தினமும் மது குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தனது 2-வது மகன் சரவணணை(18) அழைத்து தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த கண்ணன் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சரவணனுக்கு தலை, கையில் வெட்டு விழுந்தது. இதைகண்ட கண்ணனின் மனைவி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கண்ணன், அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story