குமரியில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் செல்கிறது. ஒரே நாளில் 91 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் செல்கிறது. ஒரே நாளில் 91 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் செல்கிறது. ஏனெனில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 30-ஐ தொட்டபடி இருந்து வந்தது. ஆனால் நேற்று அது 3 மடங்காக உயர்ந்துள்ளது.
அதாவது குமாி மாவட்டத்தில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 3 ஆயிரத்து 256 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 48 ஆண்கள் மற்றும் 43 பெண்கள் என மொத்தம் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 6 பேர் குழந்தைகள் ஆவர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தீவிர சிகிச்சை
இதே போல அகஸ்தீஸ்வரம்-13, கிள்ளியூர்-3, குருந்தன்கோடு-10, மேல்புறம்-5, முன்சிறை-9, ராஜாக்கமங்கலம்-4, திருவட்டார்-11, தோவாளை-1, தக்கலை-12, தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களையும் சேர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story