கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து தாமதம்
கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் கடற்சீற்றம் ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நேற்று 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் மதியம் 1 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பின்பு சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story