மதுகுடிக்க வைத்து பெண் கற்பழிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
தாவணகெரே அருகே, வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்து பெண்ணை கற்பழித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தாவணகெரே:
பெண் கற்பழிப்பு
தாவணகெரே தாலுகா மாசரஹள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்த ஒரு பெண் தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண் கிராமத்தில் உள்ள தனது சகோதரிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் மாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு, அவரது நண்பர் கிரண் ஆகியோர் வந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நிலத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு பிரபுவும், கிரணும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த கிரணும், பிரபுவும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். பின்னர் அந்த பெண்ணை பிரபுவும், கிரணும் சேர்ந்து கற்பழித்து உள்ளனர். இதனால் அந்த பெண் அலறி துடித்தார்.
2 பேருக்கு வலைவீச்சு
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த ஒருவர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார். இதனை பார்த்ததும் கிரணும், பிரபுவும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கற்பழிப்புக்கு ஆளான பெண் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தாவணகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்து பெண்ணை கிரணும், பிரபுவும் கற்பழித்தது தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரபு, கிரணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story