புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை; 2 கடைகள் மூடல்


புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை; 2 கடைகள் மூடல்
x
தினத்தந்தி 5 Jan 2022 6:20 PM IST (Updated: 5 Jan 2022 6:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகள் மூடப்பட்டன

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகள் மூடப்பட்டன.
ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் மாநகரப் பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் வ.உ.சி மார்க்கெட் மற்றும் கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள சில கடைகளை ஆய்வு செய்தனர்.
கடைகள் மூடல்
அப்போது, அந்த பகுதியில் உள்ள 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. உடனடியாக சுமார் 20 கிலோ 200 கிராம் உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த 2 கடைகளும் மூடப்பட்டன. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி, ஒரு கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
மற்றொரு கடையில் பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் பிரிவு 59-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த கடையின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
இதுபோன்று, தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக கடை மூடப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணுக்கு தடைசெய்யப்பட்ட புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.

Next Story