உடன்குடியில் ரூ.6½ கோடி ஆம்பர்கிரீஸ் பறிமுதல்; வாலிபர் கைது
உடன்குடியில் மோட்டார் சைக்கிளில் ரூ.6½ கோடி ஆம்பர்கிரீசை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் மோட்டார் சைக்கிளில் ரூ.6½ கோடி ஆம்பர்கிரீசை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
‘ஆம்பர்கிரீஸ்’ பறிமுதல்
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் உடன்குடி வில்லிகுடியிருப்பு சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அவர் திமிங்கல உமிழ்நீரான ஆம்பர்கிரீசை துணிப்பைக்குள் மறைத்து வைத்து முறைகேடாக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 6½ கிலோ ஆம்பர் கிரீஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில், அவர் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பரதர் தெருவைச் சேர்ந்த திருமலைநம்பி மகன் முருகேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான முருகேஷ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருச்செந்தூர் வனச்சரகர் ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் உயர்ரக வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் என்றும், இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.6½ கோடி வரையிலும் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story