ஆடுகள் திருடிய வாலிபர் கைது
கோவில்பட்டி அருகே ஆடுகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் திருப்பதி (வயது 32). இவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கோவில்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது 6 ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து திருப்பதி கடந்த 26-ம் தேதி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆடுகளை திருடியது கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த காசி மகன் கதிரேசன் ( 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து கதிரேசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 6 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story