கோவையில் 4 நாட்களில் 17,132 பேருக்கு கொரோனா பரிசோதனை


கோவையில் 4 நாட்களில் 17,132 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
கோவையில் 4 நாட்களில் 17,132 பேருக்கு கொரோனா பரிசோதனை
தினத்தந்தி 5 Jan 2022 7:50 PM IST (Updated: 5 Jan 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 4 நாட்களில் 17,132 பேருக்கு கொரோனா பரிசோதனை

கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது ஒரு நாளைக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவை மாநகராட்சியில் மட்டும் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் பரிசோதனையும் குறைக்கப்பட்டது.

கடந்த மாதம் ஒரு நாளைக்கு 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தற்போது மாநகராட்சி பகுதியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளது. கடந்த 1-ந் தேதி 3,106 பேருக்கும், 2-ந் தேதி 3,334 பேருக்கும், 3-ந் தேதி 5,329 பேருக்கும், 4-ந் தேதி 5,363 பேருக்கும் என கடந்த 4 நாட்களில் 17 ஆயிரத்து 132 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களில் இருமடங்காக உயர்ந்து உள்ளது.

மாநகராட்சியில் கடந்த 1-ந் தேதி 38 பேருக்கும், 2-ந் தேதி 53 பேருக்கும், 3-ந் தேதி 66 பேருக்கும், 4-ந் தேதி 76 பேருக்கும் என 4 நாட்களில் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

 கொரோனா விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.61,500 அபராதமாக விதிக்கப்பட்டது. இதுதவிர பொதுமக்கள் அதிகம் கூடும் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதுடன், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Next Story