சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 9:53 PM IST (Updated: 5 Jan 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்த மலைச்சாமி மகன் பாலசரவணன் (வயது 20). இவருக்கும், 17 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, வைகை அணை பகுதிக்கு பாலசரவணன் அழைத்து சென்றார். 
அங்கு சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த அவர், செல்போனில் புகைப்படம் எடுத்து தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி கடந்த டிசம்பர் மாதம் தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். 
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், பாலசரவணன் பெற்றோரிடம் தட்டிக்கேட்டனர். அப்போது அவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 
அதன்பேரில் பாலசரவணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரது பெற்றோர் மலைச்சாமி, அமுதா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story