உடுமலை மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்
உடுமலை மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்
உடுமலை,
உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஓ.கீதா வெளியிட்டார்.இதில் உடுமலையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 ஆயிரம் பேர் அதிகம் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 1-ந்தேதி அனைத்து சட்டமன்றத்தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகிய பணிகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. கீதா வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். அப்போது ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ஜி.விவேகானந்தன், உடுமலை தாசில்தார் வி.ராமலிங்கம், தேர்தல் துணை தாசில்தார் டி.சாந்தி, மடத்துக்குளம் தாசில்தார் எஸ்.ஜலஜா, தேர்தல் துணை தாசில்தார் எஸ்.கவுரி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
உடுமலை தொகுதி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உடுமலை சட்டமன்றத்தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 458 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 648 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 1,899 ஆண் வாக்காளர்களும், 2,429 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,333 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர்.
1,050ஆண்வாக்காளர்களும்,812பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,862 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி உடுமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 75 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 59 பேர் அதிகம் உள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதி
கடந்த ஆண்டு நவம்பர் 1-ம்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 843ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 842பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2லட்சத்து 48 ஆயிரத்து 705 ஆண் வாக்காளர்கள் இருந்தனர்.
அதன் பிறகு 1,252 ஆண் வாக்காளர்களும், 1,782 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,036 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர். 394 ஆண் வாக்காளர்கள், 334 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 728 வாக்காளர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 701 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 290 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 13 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5,589 பேர் அதிகம் உள்ளனர்.
Related Tags :
Next Story