முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கூடலூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கூடலூர்:
கூடலூர் நகரம், கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. தற்போது கேரளாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லையான குமுளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் பல்வேறு மருத்துவ சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கேரளாவை ஒட்டியுள்ள கூடலூரில் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஒமைக்ரான் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொது இடத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று நகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story