ஒடிசா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2554 டன் உரங்கள் தர்மபுரி வந்தது வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்ப நடவடிக்கை


ஒடிசா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2554 டன் உரங்கள் தர்மபுரி வந்தது வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2022 10:07 PM IST (Updated: 5 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் இருந்து 2554 டன் உரங்கள் ரெயில் மூலம் தர்மபுரி வந்தது. இந்த உரங்களை வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி:
ஒடிசா மாநிலத்தில் இருந்து 2,554 டன் உரங்கள் ரெயில் மூலம் நேற்று தர்மபுரி வந்தது. இந்த உரங்களை வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரங்கள் வந்தது
ஒடிசா மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1,284 டன் டி.ஏ.பி. உரங்கள் மற்றும் 1,270 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் என மொத்தம் 2,554 டன் உரங்கள் தர்மபுரி வந்தது. இந்த உரத்தை தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா மேற்பார்வையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்திற்கு 650 டன் டி.ஏ.பி. மற்றும் 444 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 634 டன் டி.ஏ.பி. மற்றும் 826 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விற்பனை அலுவலர் அப்துல்லா உடன் இருந்தார்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 2,294 டன் யூரியா, 238  டன் டி.ஏ.பி., 655 டன் பொட்டாஷ், 3219 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தற்போது இருப்பில் உள்ளன. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று தேவையான உரங்களை வாங்கி பி.ஓ.எஸ். எந்திரம் மூலம் ரசீது பெற்று கொள்ள வேண்டும்.
கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story