பனைமரம் நடவுக்கு 100 சதவீதம் மானியம்


பனைமரம் நடவுக்கு  100 சதவீதம் மானியம்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:09 PM IST (Updated: 5 Jan 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

பனைமரம் நடவுக்கு 100 சதவீதம் மானியம்

குமரலிங்கம், 
தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:- 
விவசாய நிலங்களில் பனை மரங்களை அதிகரிக்கும் நோக்கில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் பனை விதைகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் சங்கரமநல்லூர் மடத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப்பண்ணையில் தேர்வு செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை வைத்து பராமரித்து அவை சிறிது வளர்ந்த பின்பு பைகளில் அடைக்கப்பட்டு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குகிறது.
 எனவே தேவைப்படும் விவசாயிகள் தற்போது பனை நடவுக்கு நல்ல சூழ்நிலை இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பனை விதைகளை தங்கள் தோட்டங்களில் வளர்க்கலாம். பனை விதைகளை மானியத்தில் பெற சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். உழவன் செயலியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story