சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதபோதகர் போக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதபோதகர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 10:16 PM IST (Updated: 5 Jan 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதபோதகர் போக்சோவில் கைது

திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (வயது 31). மதபோதகர். இவர் அதே பகுதியில் தங்கி மதபோதனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம் பிரார்த்தனைக்காக வந்து சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் சாமுவேல் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்  திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். . புகாரின் அடிப்படையில் போலீசார் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
இந்த நிலையில் சாமுவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது சாமுவேலுக்கு உடல் நலம் சரியாகி விட்டதால், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி நேற்று முன்தினம் சாமுவேலை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story