‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Jan 2022 10:22 PM IST (Updated: 5 Jan 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் கிராமத்தில் சிவகாமி நகரில் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் எதிரில் உள்ள மின்கம்பம் சாய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பத்திலிருந்து ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருமீயச்சூர்.

வேகத்தடை வேண்டும் 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த திட்டச்சேரி சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் வேகமாக சென்று வருவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திட்டச்சேரி.

Next Story