திருப்பூரில் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்


திருப்பூரில் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:23 PM IST (Updated: 5 Jan 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

நல்லூர், 
திருப்பூரில் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா செடி வளர்ப்பு 
திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது பற்றிய தகவலின் பேரில் நல்லூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, முத்தனம்பாளையம், வாய்க்கால் மேடு பகுதியிலிருந்து செவந்தாம் பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவன விடுதியில் பூச்செடிகளுக்கு நடுவில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த விடுதியில் இருந்த 8 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது விடுதியில் அல்லாத வெளி நபர் ஒருவர் கஞ்சா செடிக்கு தினசரி வந்து தண்ணீர் ஊற்றிச் சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம், பெரியகுளம், தாயம்மாள் தெருவை சேர்ந்த முருகன் மகன் பார்த்தீபன் (வயது 25) என்பதும், திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும்,  கஞ்சா பொட்டலங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தானே வளர்த்து உபயோகித்து கொள்ளலாம் என கஞ்சா செடிகளை நடவு செய்து வளர்த்தது கண்டுபிடிக்கபட்டது.
வாலிபர் கைது
அதன்படி அந்த தொட்டியில்  2 அடி உயரத்தில் 4 செடிகளும்,  1 அடி உயரத்தில் 3 செடிகளும் வளர்ந்திருந்தது.  பின்னர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.

Next Story