புதுச்சத்திரம் அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு
புதுச்சத்திரம் அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள உடுப்பம் கொசவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 65). பெயிண்டர். இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் களங்காணி- திருமலைப்பட்டி சாலையில் உள்ள கிணறு ஒன்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. போதை அதிகமானதால் கிணற்றில் தவறி விழுந்த அவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பிரான்சிஸ் (34) புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story